அன்னையர் தின வாழ்த்து!
'அ" வை அறியுமுன்னே
அம்மாவை அறிந்திட்டோம்!
பத்துமாதம் சுமந்தெடுத்து
பாலூட்டி, தாலாட்டி
காலூன்றி நடப்பதை
களிப்புடன் பாராட்டி
தேவை அறிந்து
சேவை செய்வதிலே
அன்னையைப் போல்
ஆரிருப்பார் அவனியிலே!
செவிக்குணவாக
சிறந்த கதை பல சொல்லி
சீரிய சிந்தனைகள் நம்
சிந்தையில் விதைத்திடுவாள்!
வீரத்தை ஊட்டுவதில்
விஞ்சிநிற்பாள் அன்னையுமே!
வளர்த்து ஆளாக்கி
வாழவைத்த அன்னைக்கு
அன்னையர் தினமான
இந்நாளில் வாழ்த்துரைப்போம்!
-காரஞ்சன்(சேஷ்)
ஓவிய உதவி: கூகிளுக்கு நன்றி!