உடைந்த படகுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடைந்த படகுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

உடைந்த படகுகள்!-காரஞ்சன்(சேஷ்)

                                            
                                                 உடைந்த படகுகள்!



வாழ்க்கைப் பயணத்தில்
ஓடிக்களைத்து
ஒடுங்கிடும் மனிதர்கள்போல்

நீரலைமீதினிலே
நித்தம் சுமைதாங்கி
ஓ(டி)டாய்த் தேய்ந்து
ஒதுங்கிய படகுகளோ?

சுமந்து மகிழ்வளித்து
சுகவீனமானபின்னர்
அக்கறைகாட்ட ஆளின்றி
இக்கரையில் ஒதுங்கினவோ?

-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி; கூகிளுக்கு நன்றி!