உடைந்த வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடைந்த வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 அக்டோபர், 2014

ஒட்டுவாரின்றி உடைகிறதோ? -காரஞ்சன்(சேஷ்)


                                                          ஒட்டுவாரின்றி உடைகிறதோ?

ஏற்றிவைத்த விளக்குகளால்
எத்தனையோ இரவுகளில்
வெளிச்சம் பரப்பிய
விளக்குமாட விழிகள்!

எத்தனையோ மனிதர்கள்
மி(ம)தித்தும்
நித்தம் கடந்திருப்பர்
நிலைப்படியை!

எத்தனை குழந்தைகள்
ஏறிநின்று முகம்காட்டி
கெட்டியாய்ப் பிடித்திருப்பர்
எட்டுக்கம்பி ஜன்னலினை!

கட்டியவர் மட்டுமின்றி
ஒட்டிய உறவுகளும்
கைவிட்டுச் சென்றனரோ?
ஒட்டுவார் யாருமின்றி
உடைகிறதே வீடொன்று!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: நன்றி!-மாயவரத்தான் MGR அவர்களின் வலைப்பூ!