ஓவியம் ஈர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓவியம் ஈர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 மே, 2014

வரை!- காரஞ்சன்(சேஷ்)


வரை!

வரையறுத்த தொகை   
வரைவதால் கிடைக்குமெனில்
வரையளவு உயரங்கள்
வரைபவர்க்குப் பொருட்டல்ல!
 
பார்ப்பவர் கண்களை
ஈர்த்திட வேண்டி
பாவையின் கண்களை
பாங்காய் வரைகின்றார்! 

தொங்கி வரைந்தாலும்
தொய்வில்லை ஓவியத்தில்!
எங்கிருந்து பார்த்தாலும்
பார்ப்பவரைப் பார்ப்பதுபோல்
பாவையவள் தோற்றம்!

 நாலடி உயரத்தை
நாற்பதாக்கி வரைந்தாலும்
ஏற்ற இறக்கங்கள்      
என்றும் இவர்வாழ்வில்!

 வரைதலில் சிகரம்
தொட்ட இவர்-தம்
வாழ்வில் உயர்ந்திட
வாழ்த்துரைப்போமே!
-காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: மாயவரத்தான் எம்.ஜி.ஆர். வலைப்பூ