
தூக்கணாங் குருவிக்கூடு
ஏட்டுப் படிப்பின்றி
கூட்டைஅமைத்தாயோ?
பசுமை வீடமைக்க
பாடம் தந்தாயோ?
உல்லாச ஊஞ்சலென
உன்கூட்டில் அமர்ந்தாயோ?
அறைகள்பல பிரித்து
அதற்குள் வைத்தாயோ?
வாய்ப்பந்தல் நபர்களையும்
வாய்பிளக்க வைத்தாயோ?
பிறவிஞானம் இயற்கையின் கூறு!
சிறப்பாய் விளக்குது உந்தன் கூடு!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!