சேதி சொல்லு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேதி சொல்லு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 மே, 2014

பூத்தமலர் காத்திருக்க! -காரஞ்சன்(சேஷ்)


பூத்தமலர் காத்திருக்க!


கதவருகில் காத்திருந்து
கண்ணிரண்டும் பூத்ததய்யா!
தொடுத்த மலர்ச்சரமும்
துவளுதய்யா கூடையிலே!
கொடியிடையாள் பாரமதை
கொள்ளையன் நீ அறியாயோ?
மனக்கதவை திறந்தவன் நீ!
மாலையிட வாராயோ?
விரும்பிய சேதியொடு
விரைவில் நீ வந்துவிடு!
அரும்பிய புன்னகையின்
அர்த்த’மது’ கண்டுவிடு!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!