பிரிவுத்துயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரிவுத்துயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 மே, 2014

நீர் அறிய!- காரஞ்சன்(சேஷ்)

கல்லிடையே தேங்கியநீர்
கவலைமுகம் காட்டுதிங்கே!
கடல்கடந்து சென்றவர்தான்
காலத்தில் திரும்பாரோ?

பொருளின்றி வாழ்வில்லை!
பொருளொன்றே வாழ்வில்லை!
ஏக்கத்தின் தாக்கத்தை
எப்போது அறிவாரோ?

ஆறுதல் மொழிசொல்லி
அணைப்பாரோ கரங்கொண்டு?
இணைந்தமர்ந்த காட்சியுமே
இந்நீரில் தெரியாதோ?

காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!