வாழ்க்கைக்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கைக்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 மே, 2014

ஓடிவிளையாடு! -காரஞ்சன்(சேஷ்)

 
        ஓடிவிளையாடு!


புத்தகச் சுமைக்குள்ளே 
புதைந்து மூழ்காமல்,
ஒத்த சிறுவருடன் 
ஓடியாடி விளையாடு!

கத்தும் கடலையும், 
கால்வருடும் அலைகளையும்,
வித்திட்டு விளைகின்ற 
வெவ்வேறு பயிர்களையும்,  
            
எத்தனையோ வண்ணத்தில் 
எழில்கொஞ்சும் மலர்களையும்,
உதிக்கின்ற கதிரையும், 
உவந்து பாடும் குயிலையும்,

சத்தமின்றி தேன் உறிஞ்சும், 
வண்டினங்கள் வாழ்வினையும்,
நித்தமும் பார்த்து மகிழ்! 
நீ கற்பாய் ஏராளம்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!