
களிப்பூட்டும் விளையாட்டில் கவலை மறந்திடலாம்!
வெளிப்படும் உன் திறத்தால் விண்முட்டும்
புகழ்பெறலாம்!
உளிபட்ட கல்லில்தான் உயிர்சிற்பம்
உருவாகும்!
தோல்வி அடைந்தாலும் துவளாமல் முயன்றிடு!
தாளாத் துயரினை தாங்கிடும் திறன் வரும்!
ஒளிந்து விளையாடு! ஒளிக்காதே பிறர்பொருளை!
அளித்து மகிழ்தலில் ஆனந்தம் என்றுணர்வாய்!
பள்ளிப்படிப்போடு வாழ்க்கைப் பாடமும்
கற்றிடுவாய்!
--காரஞ்சன் (சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!