திங்கள், 22 அக்டோபர், 2012

வாய்திறவாய்! -காரஞ்சன்(சேஷ்)

                                                                 
                                                                 வாய் திறவாய்!

மரப்பொந்தே மாளிகையோ?

வாயிலில் காத்திருக்கும்
வாய்திறந்து சேய்ப்பறவை!

சேயின் பசித்துயரை
தாயன்றி யாரறிவார்?

இரையெடுத்துப் பறந்து
விரைகின்றாய் பசிபோக்க!

ஊட்டிடும் காட்சி- தாய்
உள்ளத்தின் சாட்சி!

கொண்டை அழகியே!-நீ
கொத்திச் செல்கிறாய்
மரத்தோடு மனத்தையும்!

-காரஞ்சன்(சேஷ்)

 பட உதவி: கூகிளுக்கு நன்றி!

19 கருத்துகள்:

  1. அருமை! படங்கள் சூப்பர்!

    பதிலளிநீக்கு
  2. தங்களின் உடனடி வருகை மகிழ்வளித்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. அருமை \\ஊட்டிடும் காட்சி- தாய்
    உள்ளத்தின் சாட்சி!

    பதிலளிநீக்கு
  4. கஜேந்திரனை காக்க
    கருடன் மேல்
    பறந்து வந்தான்
    பரந்தாமன்

    அசுரரை அழிக்க
    மயில்மீது
    ஆரோகணித்து வந்தான்
    ஆறுமுகன்

    குஞ்சின் பசி தீர்க்க
    பறந்துகொண்டே
    உணவூட்ட முயலும்
    மரங்கொத்தி பறவையே

    என் உள்ளத்தையும் கொத்திக்கொண்டு
    போய்விட்டாய்

    எங்கே வைத்திருக்கிறாய்
    என்று சொல்.வந்து
    எடுத்துக்கொள்ளுகிறேன்

    படமும் கருத்தும் அருமை
    காண்பதற்கு இனிமை
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. //ஊட்டிடும் காட்சி- தாய்
    உள்ளத்தின் சாட்சி!

    கொண்டை அழகியே!-நீ
    கொத்திச் செல்கிறாய்
    மரத்தோடு மனத்தையும்!//

    அருமையான வரிகள்... உங்கள் கவிதை எங்கள் மனதையும் கொள்ளை கொண்டு போனது.

    பதிலளிநீக்கு
  6. கொண்டை அழகியே!-நீ
    கொத்திச் செல்கிறாய்
    மரத்தோடு மனத்தையும்!

    அருமையான கவிதை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. // கொண்டை அழகியே!-நீ
    கொத்திச் செல்கிறாய்
    மரத்தோடு மனத்தையும்! //


    கவிஞர் ரமணி அவர்களின் பதிவின் வழியே வந்தேன். உங்கள் கடைசி வரிகள் அருமை!

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா! நேரம் கிடைக்கும்போது பிற பதிவுகளையும் படிக்க வேண்டுகிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு