வியாழன், 4 அக்டோபர், 2012

மீட்டிட வருவானோ? - காரஞ்சன்(சேஷ்)

                                             
                                                              மீட்டிட வருவானோ?

விண்ணிலே  ஒளிவீசும்
வெண்ணிலாவே!-இந்தப்
பெண்ணின் துயரினை
 நீ அறிவாயோ?

பாடித்திரியும் பறவைகளாய்
மாறிட மனமும் ஏங்குதடி!
கவலைமேகம் சூழ்வதனால்
கண்ணீர்த் திவலைகள் தோன்றுதடி!

என்னுள் வளரும் அவன் நினைவால்
நானோ தேய்பிறை யாகின்றேன்!
தேயும்  நிலையினை நீகடந்து
காயும் நிலவாய்த் தவழுகின்றாய்!

உனக்கென ஒருவன் ஒளிதர உள்ளதை
வெளிச்சம் போட்டு நீ காட்டுகிறாய்!
பிரிவினில் வாடும் பேதையின் துயரதை
ஏனோ இன்னும் கூட்டுகிறாய்?

மீட்டிடச்சொல்லி
கேட்டு மகிழ்ந்தவன்- எனை
மீட்டிட இங்கு வருவானோ?
வாட்டிடும் மனத்துயர்
ஓட்டி மகிழ்வினைக்
கூட்டிடும் இன்பம் தருவானோ?
-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

43 கருத்துகள்:

  1. அழகான ஏங்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. வரிகளில் இழையோடும்
    தாபத்தை தாங்க முடியவில்லை

    மீட்டிடச்சொல்லி
    கேட்டு மகிழ்ந்தவன்- எனை
    மீட்டிட இங்கு வருவானோ?
    வாட்டிடும் மனத்துயர்
    ஓட்டி மகிழ்வினைக்
    கூட்டிடும் இன்பம் தருவானோ?

    உங்கள் ஏக்கத்தை போக்க
    தாகத்தை தீர்க்க
    நிச்சயம் அவன் வருவான்
    கவலை வேண்டாம்

    பதிலளிநீக்கு
  3. இன்னிக்கிதான் உங்க பக்கம் வரேன் கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! முடிந்தால் பிற பதிவுகளைப் படித்து தங்களின் கருத்தினைப் பதிய வேண்டுகிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை சார் . முடிந்தால் மழலைகளை பற்றி, அவைகளின் குறும்புகளை பற்றி ஒரு கவிதை போஸ்ட் பண்ணுங்க
    சார்.அதைவிட சிறந்தது வேறெதுவும் இறுக்க முடியாது.
    முகுந்தன்

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கு நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  7. இலக்கியநயம் பொதிந்த கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு

  9. ஒசை நயமும் பொருளும் அருமை! தொடருங்கள் தொடர்வேன்!

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகையால் உவகை கொண்டேன்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. மீட்டு வந்து மீட்டட்டும்...வாழ்த்துக்கள்..நண்பரே...!

    பதிலளிநீக்கு
  12. மீட்டு வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. காதலின் ஏக்கம் ஒவ்வொரு வரியிலும் இழையோடுகிறது.

    பதிலளிநீக்கு
  14. இயல்பான சொற்களை கொண்டு இனிமை சேர்க்கும் அழகிய ஏக்கம் ..
    சில இடங்களில் நான் மீண்டும் மீண்டும் படித்தேன் தோழமையே ..
    அன்பு நிறை வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும், இரசித்துப் படித்து வழங்கிய கருத்துரையும் எனை மகிழ்வித்தது! நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  15. \\உனக்கென ஒருவன் ஓளிதர உள்ளதை
    வெளிச்சம் போட்டு நீ காட்டுகிறாய்!
    பிரிவினில் வாடும் பேதையின் துயரதை
    ஏனோ இன்னும் கூட்டுகிறாய்?\\

    மிகவும் ரசித்த வரிகள். பெண்ணின் பிரிவுத்துயரை ஆழமாய் வெளிப்படுத்தும் கவிதை. பாராட்டுகள் காரஞ்சன்.

    பதிலளிநீக்கு
  16. எழுதிமுடித்து படிக்கும்போது எனக்கும் பிடித்த வரிகள் இவை! தங்களின் பாராட்டிற்கு என் நன்றிகள்!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  17. மீட்டிட வருவானோ..நன்றாக இருந்தது தோழரே.. இனி தொடர்ந்து வருகிறேன்..

    பதிலளிநீக்கு
  18. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி தோழரே!

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      நீக்கு
  20. ஆழமான சிந்தனையில் விளைந்த அற்புதக் கவிதை
    ஒப்பீடும் உணர்வின் வெளிப்பாடும் உள்ளம் கவர்ந்தது
    மனம் தொட்ட படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. தங்களின் கருத்துரைக்கு நன்றி ஐயா!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  22. மீண்டும் வந்து மீட்டட்டும்.....

    நல்ல கவிதை நண்பரே... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. ஊக்கம் தருவதற்கு மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு

  24. வணக்கம்!

    வானில் திவளும் வெண்மதியே
    வாடும் பெண்ணை அறியாயோ!
    தேனின் இனிய மொழிபேசித்
    தித்தித் திருந்த உயிர்எங்கே!
    மானின் கூட்டம்! மயில்கூட்டம்
    மலரின் தோட்டம் அழுதனவே!
    மீனின் விழிகள் துயா்க்கடலில்!
    மீட்டி இசைக்க வருவானோ?

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  25. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (13/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    பதிலளிநீக்கு