புதன், 26 டிசம்பர், 2012

இடம்பிடித்தாய்!-காரஞ்சன்(சேஷ்)




      
                                                          இடம்பிடித்தாய்!
வாலாட்டி நன்றிகாட்டும்
வளர்ப்புப் பிராணிக்கு
இடத்தோளில் இடமளித்தாள்!

உள்ளத்தில் இடமுண்டு
உந்தனுக்கு என்றாளோ?

இடம்பிடித்த களிப்பு
இருக்கிறதே அதன்முகத்தில்! 
 
இடமளித்து வலம்வரும் நீ
இடம்பிடித்தாய் என்னுள்ளும்!

-காரஞ்சன்(சேஷ்)
          
பட உதவி: கூகிளுக்கு நன்றி

20 கருத்துகள்:

  1. நாய்குட்டியுடன் இருக்க வேண்டியதுதான்,ஆனால் பெற்ற குழந்தை என்ன பாவம் செய்தது

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்! தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. அதானே குழந்தையை நடக்கவிட்டு நாய்க்குட்டியை சுமந்து செல்கிரார்களே அதையும் ரசித்து கவிதை அழகா சொல்லி இருக்கீங்களே. கவிதை நல்லா இருக்கு . வழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. “இடமளித்து வலம்வரும் நீ
    இடம்பிடித்தாய் என்னுள்ளும்!“

    அழகான பொருள் பொதிந்த வரி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு நன்றி! இடம், வலம் எனும் பொருள்படவும் எழுதியிருந்தேன்! இரசித்துப் படித்தமைக்கு நன்றி!

      நீக்கு
  5. இடம்பிடித்த களிப்பு
    இருக்கிறதே அதன்முகத்தில்!

    இடமளித்து வலம்வரும் நீ
    இடம்பிடித்தாய் என்னுள்ளும்!

    நல்ல தாய் தான் ! நாய்க்கு ..!

    பதிலளிநீக்கு
  6. படத்துக்கு கவிதை சூப்பர்.. நன்றாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. இடமளித்து வலம்வரும் நீ
    இடம்பிடித்தாய் என்னுள்ளும்!//


    படமும் , கவிதையும் எனக்குள்ளும் இடம் பிடித்தாள்.

    பதிலளிநீக்கு
  8. படமும் கவிதையும் அருமை
    முற்பிறவியில் அந்த நாய் அந்த பெண்ணின் தாயாக
    இருந்திருக்கலாம் அவள் தன்னை வயிற்றில் சுமந்த கடனை தீர்க்க நன்றிக்கடனை தீர்க்க இப்பிறவியில் அந்த நாயை அவள்தன் தோளில் சுமந்து செல்கிறாள் போலும்.

    பதிலளிநீக்கு
  9. இடம்பிடித்த களிப்பு
    இருக்கிறதே அதன்முகத்தில்!

    இடமளித்து வலம்வரும் நீ
    இடம்பிடித்தாய் என்னுள்ளும்!

    சூப்பர் படம், அதற்கேற்ற சூப்பர் கவிதை.

    பதிலளிநீக்கு