செவ்வாய், 13 மே, 2014

தூணில் உதித்த தூயோனே போற்றி! -காரஞ்சன்(சேஷ்)


தூணில் உதித்த தூயோனே போற்றி! -
(200 ஆவது பதிவு)
காலைக் கதிரவனும்
கடலிடை எழுகின்றான்!

சோலை மலர்களெலாம்
மாலையாய்த் தோள்சேர
மலர்ந்தெங்கும் சிரிக்கிறதே!

அதிகாலைப் புள்ளினங்கள்
துதிபாடித் துயிலெழுப்ப 
திருவடி தொழுதிடவே
தேடிவந்து தினந்தோறும்
நின்ஆலய வாசலிலே
நிற்கின்றோம் அனைவருமே!

ஆணவத்தை அழிக்க
அவதரித்த திரு உருவே!
தாமரைக் கண்திறந்து
தயை புரிவாய் எங்களுக்கே!

ஒருகண்ணால் உனைநோக்கும்
உத்தமியின் திருவிழிகள்
நித்தமும் எங்களுக்கு
நிம்மதியை அருளாதோ?

நாளை என்பதே
நரசிம்ம ரிடமில்லை!
எங்கும் உறைபவன் நீ!
இல்லாத இடமில்லை!

காண்பவர் கவலையெலாம்
களைந்திடும் மாமணியே!
நான்காம் அவதாரமே!
நாங்களெலாம் நின்பிள்ளை!

என்ன பிழை யாம் செய்தோம்?
ஏனிந்த பெரும் துயரம்!
நாடிவந்தோம் நின்னருளை
நல்கிடுவாய் நரசிம்மா!
  
சேயாம் எங்களுக்கு
தாயாய் அருள்பவன் நீ!

எந்தை முன்னோரும்
ஏத்திட்ட தந்தை நீ!

வேள்வித் தீயினிலே
விளைந்தெழும் உருவில் நீ!

எங்கும் நிறைந்தவன் நீ!
எதிலும் உறைபவன் நீ!

வரத்தில் அடங்காத
வடிவம் பெற்றவன் நீ!

கருணைக் கடலும் நீ!
காப்பாற்ற வந்தவன் நீ!

சரணாகதி யென்றோர்க்கு
சகலுமும் அருள்பவன் நீ!

நின்திருவிழிகள் அருளாலே
தீவினைகள் அகலாதோ?

விண்ணளந்த பெருமாளே!
விழைந்தெமக்கு அருள்செய்வாய்! 

-காரஞ்சன்(சேஷ்)


 படம்: பூவரசங்குப்பம் அருள்மிகு அமிர்தவல்லி நாயிகா சமேத ஶ்ரீ லக்‌ஷ்மி நரசிம்மர்.

35 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் இன்னும்பல ஆயிரம் பதிவுகள் மலரட்டும் சிறப்பாக உள்ளது கவிதை

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 2. (200 ஆவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்..

  தூணில் உதித்த தூயோன் அருள் மழை பொழியட்டும்..

  பதிலளிநீக்கு
 3. தூணில் உதித்த தூயோன்.....

  அவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.....

  200-வது பதிவிற்கு வாழ்த்துகள் சேஷாத்ரி.

  பதிலளிநீக்கு
 4. 200 அடிச்சதுக்கு வாழ்த்துகள் சகோ!

  பதிலளிநீக்கு
 5. 200 அடிச்சதுக்கு வாழ்த்துகள் சகோ!

  பதிலளிநீக்கு
 6. 200வது பதிவுக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துகள். தூணில் உதித்த தூயோன் அனைவருக்கும் அருள் மழை பொழியட்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 7. இறைவனின் அருள் போற்றும் சிறப்பான 200-வது பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

   நீக்கு
 8. தந்தைக்கு உபதேசம் செய்தான்
  முருகன் -சாமிநாதன் ஆனான்
  பிரகலாதனும் தந்தைக்கு
  காட்டினான்
  தூணிலும் இருப்பான்
  த்வாரகாநாதன் என்பதை

  அவனுக்கு மட்டுமல்ல
  அனைவருக்கும்தான்.

  கவிதை அருமை. -பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 9. தூணைப் பாட்டியாக்கிப் ப்ரகலாதனுக்கு அருள் செய்த பெருமாள் என்றும் துணையிருக்கட்டும். உங்களது 200 ஆவது நிறைந்த வாழ்த்துகள் .இன்னும் வளம் பெருகட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

   நீக்கு
 10. 200 - பல நூறுகள் காண்க ...
  தூக்கனாங்குருவிக்கூடு, காத்திருந்த மலர் - கதையெல்லாம் கேட்ட பின்
  நிறைவாய் நரசிம்மர் கதையும் அருமை .. தொடரட்டும் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 11. நரசிம்மர் துதி அற்புதம்! இருநூறு பலநூறாகட்டும்! எல்லோருக்கும் அந்த தூணில் தோன்றிய தூயோன் அருள் பாலிக்கட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி

   நீக்கு
 12. அகமகிழ்ந்தேன்! அற்புதம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி

   நீக்கு
 13. ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி அன்று சிறப்பான ஒரு படைப்பு! படித்து ரசித்தேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி

   நீக்கு
 14. ஜெய் நரசிம்ஹா!!!நல்ல படைப்பு!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

   நீக்கு
 15. அற்புதம் ஐயா...

  200 ஆவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 16. >Nice one brother< Lord Narasimha blessed me with His darshan at Poovarasankuppam on Nrusimha Jayanthi day.

  பதிலளிநீக்கு
 17. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

  பதிலளிநீக்கு