வியாழன், 8 மே, 2014

தூக்கணாங் குருவிக்கூடு! -காரஞ்சன்(சேஷ்)தூக்கணாங் குருவிக்கூடு

ஏட்டுப் படிப்பின்றி
கூட்டைஅமைத்தாயோ?

பசுமை வீடமைக்க
பாடம் தந்தாயோ?


உல்லாச ஊஞ்சலென
உன்கூட்டில் அமர்ந்தாயோ? 


அறைகள்பல பிரித்து
அதற்குள் வைத்தாயோ?

வாய்ப்பந்தல் நபர்களையும்
வாய்பிளக்க வைத்தாயோ?

பிறவிஞானம் இயற்கையின் கூறு!
சிறப்பாய் விளக்குது உந்தன் கூடு!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

27 கருத்துகள்:

 1. அழகான படங்களுடன் அற்புதமான ஆக்கம். பாராட்டுக்கள்.

  பறவைகள் அழகான கூடுகள் அமைக்க எந்தப் பொறியியல் கல்லூரில் சேர்ந்து பாடம் கற்றுத் தெரிந்து கொண்டன என நான் அடிக்கடி எண்ணி எனக்குள் வியப்பதுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா! எனக்கும் அந்த எண்ணம் உண்டு! இயற்கையின் அதிசயம்! நன்றி ஐயா!

   நீக்கு
 2. தூக்கணாம் குருவிக்கு தன் வீடு எப்படி இருக்கணும்னு கட்டிக்கத் தெரியுது ,மனுசந்தான் வாஸ்து பார்த்துகிட்டு அலையுறான் !
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி! த.ம.2 க்கும் நன்றி!

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  அழகிய கவிதையின் வரிகளை ரசித்தேன் படம் மிக அழகு வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 4. பிறவிஞானம் இயற்கையின் கூறு!
  சிறப்பாய் விளக்குது உந்தன் கூடு!
  சிறகடிக்கும் குருவியின்
  சிறப்பான வீடிது..!

  பதிலளிநீக்கு
 5. பாடலும் அதற்குப் பொருத்தமான கூடுகளும் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 7. பிறவிஞானம் இயற்கையின் கூறு!
  சிறப்பாய் விளக்குது உந்தன் கூடு!//

  அட்டகாசமான வரிகள்
  படமும் அதற்கான கவிதையும்
  மிக மிக அற்புதம்
  தொடர வாழ்த்துக்கள்  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 8. கவிதையும் கவிதைக்கான படங்களும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 9. ஏட்டுப் படிப்பின்றி
  கூட்டைஅமைத்தாயோ?...நல்ல கேள்விதான்! தொடர வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. ந்த குருவி கூட்டில்தான் என்ன கலை நயம்!வியப்பு சேஷா!!

  பதிலளிநீக்கு
 11. உண்மைதான்! நாம் கிராமத்தில் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம் அல்லவா?

  பதிலளிநீக்கு
 12. அருமையான கவிதை.பாராட்டுகள்.

  --

  பதிலளிநீக்கு
 13. இப்படி ஒரு கவிதைப் பக்கத்தை எப்படி இத்துணை நாள் மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை
  வாழ்த்துக்கள் தொடர்க
  த.ம ஏழு
  http://www.malartharu.org/2014/05/100results-sslc.html

  பதிலளிநீக்கு