புதன், 28 மே, 2014

ஓடிவிளையாடு! -காரஞ்சன்(சேஷ்)

 
        ஓடிவிளையாடு!


புத்தகச் சுமைக்குள்ளே 
புதைந்து மூழ்காமல்,
ஒத்த சிறுவருடன் 
ஓடியாடி விளையாடு!

கத்தும் கடலையும், 
கால்வருடும் அலைகளையும்,
வித்திட்டு விளைகின்ற 
வெவ்வேறு பயிர்களையும்,  
            
எத்தனையோ வண்ணத்தில் 
எழில்கொஞ்சும் மலர்களையும்,
உதிக்கின்ற கதிரையும், 
உவந்து பாடும் குயிலையும்,

சத்தமின்றி தேன் உறிஞ்சும், 
வண்டினங்கள் வாழ்வினையும்,
நித்தமும் பார்த்து மகிழ்! 
நீ கற்பாய் ஏராளம்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

29 கருத்துகள்:

  1. தலைப்பும் படமும் பாடல் வரிகளும் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கருத்தாய் கற்க
    களிப்புடன் விளையாடுவதும் பயன்தருமே...

    பதிலளிநீக்கு
  3. பள்ளி திறக்கும் நேரம் .. கருத்தான பதிவு . . வாழ்க

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  5. நல்ல கவிதை! தொடர்க!-தக்‌ஷி

    பதிலளிநீக்கு
  6. நல்ல கற்பனை அருமையான கவிதை. நன்றி வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  7. த.ம ஐந்து
    அருமையான கவிதை...
    தொடர்க
    http://www.malartharu.org/2014/05/100results-sslc.html

    பதிலளிநீக்கு
  8. naalukku naal ungal kavithaigal urameri olirgindrana vaazhthukkal menmelum valarga

    பதிலளிநீக்கு