வெள்ளி, 30 மே, 2014

களிப்பூட்டும் விளையாட்டு! -காரஞ்சன்(சேஷ்)
களிப்பூட்டும் விளையாட்டில் கவலை மறந்திடலாம்!
வெளிப்படும் உன் திறத்தால் விண்முட்டும் புகழ்பெறலாம்!              
உளிபட்ட கல்லில்தான் உயிர்சிற்பம் உருவாகும்!
தோல்வி அடைந்தாலும் துவளாமல் முயன்றிடு!              
தாளாத் துயரினை தாங்கிடும் திறன் வரும்!
ஒளிந்து விளையாடு! ஒளிக்காதே பிறர்பொருளை!
அளித்து மகிழ்தலில் ஆனந்தம் என்றுணர்வாய்!
பள்ளிப்படிப்போடு வாழ்க்கைப் பாடமும் கற்றிடுவாய்!

  --காரஞ்சன்  (சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!          

13 கருத்துகள்:

 1. வணக்கம்

  ரசிக்கவைக்கும் பாடல்.. வரிகள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 3. நன்று!
  /உளிபட்ட கல்லில்தான் உயிர்சிற்பம் உருவாகும்!/
  ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 4. //அளித்து மகிழ்தலில் ஆனந்தம் என்றுணர்வாய்!//
  இதை அனுபவித்து விட்டால் வையகம் வானகம் அல்லவா?
  அருமை தொடர்க
  http://www.malartharu.org/2014/05/100results-sslc.html
  த.ம ஐந்து

  பதிலளிநீக்கு
 5. உன் பணிகளுக்கு இடையே இக்கவிதை பயணம் புத்துணர்வை அளிக்கட்டும்.களிப்பூட்டும் கவிதை!

  பதிலளிநீக்கு