சனி, 10 மே, 2014

கதைகேளூ! கதைகேளூ! -காரஞ்சன்(சேஷ்)


கதைகேளூ! கதைகேளூ!



கடந்தகாலமெல்லாம்
கண்முன்னே நிக்குதய்யா!
நடந்தகதை நான்சொல்ல
நாட்கள் பல ஆகுமய்யா!

சேத்து வயல்களிலே
நாத்து நடப்போவோம்!
சிறப்பாநெல் விளைய
சேர்ந்து உழைச்சிடுவோம்!

இலைதழை புண்ணாக்கு
இயற்கை உரமிடுவோம்!
மருந்தடிக்கும் இந்நாளில்
மருந்தே உணவாகுதய்யா!

நாலெழுத்துப் படிச்சிருந்தா
நல்லா இருந்திருக்கும்!
பேரெழுதத் தெரிஞ்சுகிட்டேன்!
பெரிசா ஏதுமில்லை!
 
கட்டாயக் கல்விக்கு
சட்டம் அப்ப இல்லை!
காலணா காசுக்கு
காலைமுதல் உழைச்சிருப்போம்!

கூத்தும் நாடகமும்
கும்பலா பார்த்திடுவோம்!
நல்ல சில விஷயங்கள்
நானறிஞ்சேன்  அப்படிதான்!

படிப்பும் அவசியந்தான்
பட்டபின்னே உணர்ந்துகிட்டேன்!
இந்நாளில் படிக்கவைக்க
எம்மாஞ் செலவாகுதய்யா!

காலம் மாறிடுச்சி!
காடுநெலம் கொறைஞ்சிடுச்சி!
மாறி வரும் மழை போல
மனுஷ மனம் மாறிடுச்சி!

கம்ப்யூட்டர் வழியாவும்
கல்யாணம் நடக்குதுங்க!
ஆன சிலநாளில்
அதுக இரண்டும் பிரியுதுங்க!

புதுவாழ்க்க தொடங்கிப்புட்டா
புரிஞ்சுக்க வேணுமுங்க!
விட்டுக் கொடுப்பதிலே
வெளையும் பல நன்மையுங்க!

இலையெல்லாம் சருகாகும்
இயற்கை விதி இதுவாகும்!
இளக்காரம் செய்யாம
எம்பேச்சைக் கேட்டுக்கோங்க!

படிச்ச புள்ளைகளா-ஒரு
பாடம் சொல்லித்தாரேன்!

பெத்து வளத்தவங்க
பேசும் தெய்வமுங்க!
கடைசி காலம்வர
காப்பாத்த வேணுமுங்க!

கம்ப்யூட்டர் உள்ளாற –என்
கதையக் கொஞ்சம் போட்டுடுங்க!
கதையப் படிச்சவங்க
கருத்த கொஞ்சம் போடுங்களேன் !
 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

18 கருத்துகள்:

  1. களைகளை களைந்து -உயிரான பயிர் வளர்க்கும்
    கதை கேளு...கதை கேளு...!

    பதிலளிநீக்கு
  2. பாட்டி சொல்லும் கதையாக பல நல்ல கருத்துகளைப் பக்ரிந்த கவிதை அருமை! தொடர்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

      நீக்கு
  3. பாட்டி வாயிலாக பல நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதற்குப் பாராட்டுக்கள்.//

    //பெத்து வளத்தவங்க பேசும் தெய்வமுங்க!
    கடைசி காலம்வர காப்பாத்த வேணுமுங்க!//

    ;) அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      நீக்கு
  4. பெயரில்லா10 மே, 2014 அன்று PM 10:45

    வணக்கம்
    ஐயா

    சீராக அடி எடுத்து சீர்கொண்ட கவிதை நினைவுகளை சொல்லுது ...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      நீக்கு
  5. //நாலெழுத்துப் படிச்சிருந்தா
    நல்லா இருந்திருக்கும்!
    பேரெழுதத் தெரிஞ்சுகிட்டேன்!
    பெரிசா ஏதுமில்லை!//
    யதார்த்த வரிகள் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      நீக்கு
  6. பெயரில்லா11 மே, 2014 அன்று AM 7:43

    னெடிய கவிதை கூறும் கருத்துகள் அருமை! பகிர்விற்கு நன்றி!-தக்‌ஷி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  7. படிக்கவில்லை என்றாலும் விஷய ஞானத்தில் முன்ணணி வகிக்கும் பாட்டி வாழ்க நூறாண்டு !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      நீக்கு
  8. கருத்துள்ள வரிகள் ஐயா...

    பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      நீக்கு
  9. பாட்டி சொன்ன கதை பல விஷயங்களைச் சொல்லி விட்டதே.....

    நல்ல கவிதை நண்பரே. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு